பாடசாலை மாணவர்களுக்காக விசேட பேருந்து சேவை

School2
School2

பாடசாலை மாணவர்களுக்காக இன்று முதல் விசேட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முதல் கட்டமாக மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டோ தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அதிகளவான பேருந்துகளை இன்றைய தினம் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இன்மை காரணமாக சில இடங்களில் பேருந்துகள் சேவையில் ஈடுபடாதுள்ளன.

எனினும், தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சாலைகளின் ஊடாக எரிபொருள் விநியோகிக்குமாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அவ்வாறு எரிபொருள் கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தில், உரிய வகையில் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.