இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைகிறது!

bus 1 720x375 1
bus 1 720x375 1

இன்று நள்ளிரவு முதல் சாதாரண பேருந்து பயணக் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரிண்டா இதனை தெரிவித்துள்ளார்.

பேருந்து பயணக் கட்டணங்கள் எத்தனை சதவீதம் குறைக்கப்படும் என்பது தொடர்பில், இன்று மதியம் அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதிவேக வீதியின் பேருந்து போக்குவரத்துக்கான கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரிண்டா தெரிவித்துள்ளார்.