இன்று எரிபொருள் விலையில் திருத்தம்?

desel
desel

இந்த மாதத்தில் இரண்டாவது முறையாகவும் இன்று (15) எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றத்துக்கமைய,  உள்ளூரில் எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில், எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாக அறிவித்தது.

அதற்கமைய, கடந்த முதலாம் திகதி, எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டது.

அதன்போது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலையை மாத்திரம் 10 ரூபாவினால் குறைத்து புதிய சில்லறை விலையை 430 ரூபாவாக நிர்ணயித்தது.

எனினும், பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும்சுப்பர் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதன்படி, 92 ஒக்டென் பெற்றோல் லீற்றர் ஒன்றின் சில்லறை விலை 450 ரூபாவாகவும், 95 ஒக்டென் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 540 ரூபாவாகவும், லங்கா சுப்பர் டீசல் விலை 510  ரூபாவாகவும், மண்ணெண்ணெய் 87 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.