யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 75வது சுதந்திர தின நிகழ்வுகள்!

1111111111111111111111111111111111111111
1111111111111111111111111111111111111111

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று(15) காலை 9மணிக்கு இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றிவைத்தார்.

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தார்.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.