வவுனியாவில் ஆக்கிரமித்துள்ள பார்த்தீனியம்!

IMG 20220819 152007 2
IMG 20220819 152007 2

வவுனியாவில் பல பகுதிகளை பார்த்தீனிய களை ஆக்கிரமித்துள்ளது.
குறிப்பாக நகர் பகுதிகள், வீதியோரங்கள், புகையிரத பாதைகளுக்கு அருகில், விவசாய நிலங்கள் என பல இடங்களில் இவை ஆக்கிரமித்துள்ளன.

IMG 20220818 141901


விவசாயத்துறைக்கு அதிகளவில் கேடு விளைவிக்கும் தாவரமாக பார்த்தீனியம் காணப்படுகின்றது.விவசாயப் பயிர்களை அழித்து ஆக்கிரமித்து வளரக்கூடிய தன்மையுள்ளமையால், இந்த களை பரவும் இடத்தில் பயிர்செய்கை பண்ணமுடியாதுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டனர்.

இதேவேளை  பார்த்தீனியக்களை பரவுவதை தடுப்பதற்கு கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அச்செயற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படாமையினாலே தற்போது இந்நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.