வவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகள் பாதிப்பு

1 14
1 14

வவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

15 ஆயிரத்து 150 ஏக்கர் அளவில் வவுனியா மாவட்டத்தில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு 12 ஆயிரத்து 909  ஏக்கர் வரை நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து நெல் அறுவடை செய்யும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

snapshot 001

இந்நிலையில் கடந்த சிலநாட்களாக வவுனியா மாவட்டத்தில் பெய்து வருகின்ற மழை காரணமாக 2240.25 ஏக்கர் வரையிலான நெல் அறுவடையினை மேற்கொள்வதற்கு விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக கடந்த காலங்களில் டீசல் மற்றும் உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலைமையிலும் தமது வாழ்வாதாரமான நெற்செய்கையினை கைவிடமால் தொடர்ந்து மேற்கொண்டிருந்தனர். அத்தோடு இச்சிறுபோகத்தின் போது ஒரு அந்தர் உரத்தினை சுமார் 40,000 ரூபா வரையில் கொள்வனவு செய்தே இவ் நெற்செய்கையினை மேற்கொண்டிருந்தனர்.

1 11

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற மழை காரணமாக நெல்லினை அறுவடை செய்வதில் பாரிய சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 
எனவே இதனை கருத்திற்கொண்டு அரசாங்கம் தமக்கான உதவியினையோ அல்லது நிவாரத்தினையோ தந்துதவ வேண்டும் என்பதே வவுனியா மாவட்ட விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது.