வவுனியாவில் திருடப்பட்ட 9 சைக்கிள்கள் மீட்பு 4 சந்தேக நபர்கள் கைது

kaithu
kaithu

வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டபோது திருடி செல்லப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் ஒன்பது இன்று காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக நால்வர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளார் .

வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாகவும் நகர்ப்பகுதிகளிலும் பொது மக்களினால் திறுத்தி வைக்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் பல திருட்டு போயுள்ளதாக கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைவாக காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது ஒன்பது துவிச்சக்கரவண்டிகள் இன்று மீட்கப்பட்டது. இச்சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் துவிச்சக்கரவண்டிகளைத் திருடி விற்பனையில் ஈடுபட்டுள்ளது விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இச்சம்பவங்கள் குறித்து மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.