வவுனியாவில் ஆசிரியரை தாக்க முயற்சி மாணவர் காயம்!

images 3
images 3

வவுனியாவில் நேற்று இரவு தனியார் கல்வி நிலையத்தில் ஆசிரியர் ஒருவரைத் தாக்க முற்பட்ட மாணவர்களினால் ஆசிரியருக்கு அருகில் நின்ற மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தலையில் காயமடைந்த குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


நேற்று மாலை வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் அங்கு நின்ற மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டனர். இதை அங்கு நின்ற ஆசிரியர் அவதானித்துள்ளதுடன் தனது கல்வி நிலையத்துடன் தொடர்பு அற்ற மாணவர்களை அங்கிருந்து செல்லுமாறும் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என்று எச்சரித்த போது திடீரென்று தலைக்கவசத்துடன் நின்ற மாணவர் ஒருவர் குறித்த ஆசிரியரை இலக்கு வைத்து தாக்க முற்பட்டபோது அருகில் நின்ற மாணவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இதன்போது காயமடைந்த தனியார் கல்வி நிலையத்தில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்ட19வயது மாணவர் காயமடைந்து வைத்தியசாலை விபத்துப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து காயமடைந்த மாணவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாட்டினையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.