வவுனியா – பட்டாணிச்சூர் பகுதியில் இளைஞர் குழு தாக்குதல்:ஒருவர் படுகாயம்!

IMG20220922155752
IMG20220922155752

வவுனியா – பட்டாணிச்சூர் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தமிழ் இளைஞர் மீது இஸ்லாமிய இளைஞர்கள் தாக்குதல் நடத்தியமையால் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

news 13


நேற்று (22.09) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நெளுக்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் பட்டாணிச்சூர் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கு நேற்றைய தினம்  சென்றுள்ளார்.


இதன்போது அங்கு கூடிநின்ற குழு ஒன்று அந்த இளைஞர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதுடன் அவரது தொலைபேசியை பறிமுதல் செய்து, மிரட்டி கடிதம் ஒன்றையும் பெற்றுள்ளது.

IMG20220922155515


குறித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் நெளுக்குளம் காவல் நிலையத்தில் முறைபாட்டினை பதிவு செய்துள்ளதுடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
சம்பவத்தையடுத்து அப் பகுதியில் தமிழ் இளைஞர்களும் ஒன்று கூடியமையால் இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம்காவற்துறையினர் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததனர். 

news 2


குறித்த சம்பவம் காதல் விவகாரம் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. 
இதேவேளை இவ்தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தி அறிக்கையிட சென்ற வவுனியா பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரும் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது கடமைக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்து நெளுக்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளார்.


தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெளுக்குளம் காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்