இரண்டாவது நிலக்கரி கப்பலுக்கு முற்பணம் செலுத்தப்பட்டது

container ship trade 810x524 1
container ship trade 810x524 1

இரண்டாவது நிலக்கரி கப்பலுக்கான முற்கொடுப்பனவு நடவடிக்கைகள் நேற்றைய தினம் நிறைவடைந்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர், 35,000 மெற்றிக் டன் 92 ஒக்டேன் பெற்றோலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இறக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை 15 லீற்றராக அதிகரிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டால் உயர்த்தப்பட்ட முச்சக்கர வண்டி கட்டணமும் குறைக்கப்படும் என சங்கத்தின் தலைவர் சுதில் ஜெய்ருக் தெரிவித்தார்.