காணாமல்போனோரின் உறவுகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

image 750x 60b1387cdb43e
image 750x 60b1387cdb43e

காணாமல்போனோரின் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்படடுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும், காணாமல்போனோர் சான்றிதழுக்கமைய, காணாமல்போனோரின் நெருங்கிய உறவினர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நிதிக்கொடுப்பனவு வழங்க கடந்த மார்ச் 14 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது.

எவ்வாறாயினும், காணாமல்போனோர் தொடர்பான சான்றிதழை பெற்றுக்கொள்ள நீண்ட காலமாதல், ஒரு இலட்சம் ரூபா போதுமானதல்ல போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இவ்விடயங்களை கருத்திற்கொண்டு ‘காண கிடைக்கவில்லை’ என்ற சான்றிதழை பெறவேண்டும் என்ற கட்டாயத்தை நீக்குவதற்கும், வழங்கப்படும் நிதியை 2 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கும்  நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சமர்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இதுவரை வழங்கப்பட்டுவந்த ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு 2 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.