கப்ராலுக்கு எதிரான பயணத்தடை தொடர்ந்தும் நீடிப்பு!

ajith N kabral
ajith N kabral

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடை தொடர்ந்தும் எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

2006 முதல் 2015 வரையான காலப்பகுதியில், மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய காலப்பகுதியில் அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டி, அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த தனிப்பட்ட முறைப்பாடு இன்று (24) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது, ​​பிரதிவாதியான அஜித் நிவாட் கப்ரால் நீதிமன்றில் முன்னிலையானார்.

அதன்போது, ​​அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த வழக்கை தொடர்ந்தும் கொண்டு செல்லமுடியாது என அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்தனர்.

இந்தநிலையில், அடிப்படை ஆட்சேபனைகள் தொடர்பான எழுத்து மூலம் சமர்ப்பணங்களை  எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி சமர்ப்பிக்குமாறும் கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுனவல மனுதாரரின் சட்டத்தரணிக்கு உத்தரவிட்டுள்ளார்.