அரிசியின் விலை 40 ரூபாவால் குறைவதற்கான சாத்தியம்!

2154c rice2bsack
2154c rice2bsack
ஒரு கிலோ நெல்லின் விலை இருபத்தி நான்கு ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் நேற்று (24ஆம் திகதி) நிலவரப்படி ஒரு கிலோ நெல் 101 ரூபாவாக குறைந்துள்ளது.
ஒன்றரை மாதங்களுக்கு முன், ஒரு கிலோ நெல் 125 ரூபாவுக்கு, ஆலை உரிமையாளர்கள் கொள்வனவு செய்தனர். ஆலை உரிமையாளர்கள் அறுபத்து நான்கு கிலோகிராம் கொண்ட நெல் மூடையை எட்டாயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்த போதிலும், நேற்று (24) ஒரு நெல் மூடை ஆறாயிரத்து ஐநூறு ரூபாவுக்கு விற்பனையானது.
இந்தப் பருவ அறுவடையின் போது விவசாயிகளிடம் இருந்து ஒரு மூடை நெல் 4500 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய பாரிய ஆலை உரிமையாளர்கள் மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.