பொதுச் சொத்துக்களை விற்றேனும் டொலரை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – பந்துல

6bbb91ca bandula 850x460 acf cropped 850x460 acf cropped
6bbb91ca bandula 850x460 acf cropped 850x460 acf cropped

நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்தேனும் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணப்படாவிடின் சர்வதேச சந்தையுடன் இலங்கை கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது கடினமாகிவிடும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் நேற்று (6) அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் வெளிநாட்டு கையிருப்பை கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படாவிட்டால், தற்போதுள்ள டொலர் நெருக்கடியை ஏதேனுமொரு சொத்தை விற்று தீர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இல்லை என்றால் சர்வதேச நாடுகளுடன் கொடுக்கல் வாங்கலை செய்யும் திறனை இலங்கை இழந்துவிடும். அத்துடன், அரசாங்கத்தின் அன்றாட செலவுகளை பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்படும் எனவும் பந்துல குணவர்தன வலியுறுத்துகின்றார்.

வெளிநாட்டு கையிருப்பை 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கொண்டு செல்வதற்கு இலங்கை கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்து வரவு செலவுத் திட்ட நெருக்கடியைத் தணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இறுதியாக, இவ்வாறான சொத்துக்களை விற்பனை செய்வதில் நாம் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.

முடிந்தவரை வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் எனவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.