சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பதற்கு அனுமதி!

power cut energy Electricity pucsl CEB 9
power cut energy Electricity pucsl CEB 9

நாட்டில் இன்றும் நாளையும் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்றும் (21) நாளையும் (22) 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

‘ஏ’ முதல் ‘எல்’ வரையான வலயங்களிலும் ‘பீ’ முதல் ‘டபிள்யூ’ வரையான வலயங்களிலும் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன், நாளை மறுதினமும் (23) மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.