பெப்.17 வரை மின்துண்டிக்க அனுமதியில்லை – இ.மி.சவுக்கு ஜனக கடிதம்

22 622b7a7e96af6
22 622b7a7e96af6

2022 உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.

இன்று (27) மின்தடையை அமுல்படுத்துவதற்கு அனுமதிகோரி, இலங்கை மின்சார சபை பொது முகாமையாளரால் நேற்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கடிமொன்று அனுப்பப்பட்டதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் பரிமாற்றம் மற்றும் மொத்த விநியோக உரிமம் எண் 30 (10) இன் நிபந்தனையின் கீழ், 2022 பெப்ரவரி 18 முதல் 2023 ஜனவரி 25 ஆம் திகதி வரை மின்சாரத்தை துண்டிக்க அனுமதிக்க விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளதாக ரத்நாயக்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 331,709 பரீட்சார்த்திகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நேற்று முதல் எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட மின்சாரத் தடையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரிக்காது என்று அவர் கூறினார்.

இதன்படி, பெப்ரவரி 17 ஆம் திகதி வரை தடையற்ற மின்சாரத்தை வழங்குமாறு மின்சார சபைக்கு அறிவுறுத்துவதாகவும், அதுவரை திட்டமிடப்பட்ட மின்சாரத் தடைகளுக்கான அனுமதிக் கோரிக்கைகளை சமர்ப்பிப்பதைத் தவிர்க்குமாறும் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும், மேற்கூறிய காலத்தில் மின் தடைகள் விதிக்கப்பட்டால், மின்சார பரிமாற்றம் மற்றும் மொத்த விநியோக உரிமம் எண் EL/T/09-002 இன் நிபந்தனை 30(10)ஐ மீறுவதற்கு மின் விநியோக உரிமதாரர் சட்டப்பூர்வமாக பொறுப்பேற்க வேண்டும் அவர் தெரிவித்தார்.