எத்தரப்பையும் பாதிக்காத வகையில் களப்பு ஆழப்படுத்தப்படும்-டக்ளஸ்

1 DAKLAS
1 DAKLAS

களப்பை ஆழப்படுத்தும் செயற்பாடுகள் உரிய ஆய்வுகளின் அடிப்படையில், எந்தத் தரப்பினரையும் பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நீர்கொழும்பு களப்பின் ‘யக்கா வங்குவ’ எனும் பகுதியை பார்வையிட்ட பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடி கடற்றொழிலாளர்களின் கடல் போக்குவரத்து பாதையாக இருக்கின்ற நீர்கொழும்பு களப்பின் யக்கா வங்குவ பகுதியை புனரமைத்து தருமாறு கோரப்பட்டிருந்தது.

புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுமாயின், அதனை அண்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கருவாடு உற்பத்தி பாதிக்கப்படும் எனவும், அதனால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் இன்னொரு தரப்பினால் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்தநிலையில், சம்பந்தப்பட்ட பகுதிக்கு அதிகாரிகள் சகிதம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலமைகளை நேரடியாக ஆராய்ந்ததுடன் பிரதேச மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார்.