கிளிநொச்சியில் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு

1677645645 bank 2
1677645645 bank 2

கிளிநொச்சி மாவட்டத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

கிளிநொச்சியில் உள்ள அரச வங்கிகள் முழுமையாக பூட்டப்பட்டுள்ளதுடன், சேவைகள் எவையும் இடம்பெறவில்லை. இதனால் வங்கி சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மின்சார சபையின் அலுவலகமும் பூட்டப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் பணிக்கு செல்லாது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதேவேளை, அவசர சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மின் பொறியியலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது