தொடரூந்தின் கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்ட 10 நாட்களேயான சிசு!

334966189 1630326430758892 5834242920919152569 n
334966189 1630326430758892 5834242920919152569 n

பிறந்து 10 நாட்களேயான சிசு ஒன்று கொழும்பு – கோட்டை தொடரூந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடரூந்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

334957771 752821166469631 4352525815521503762 n

கொழும்பு – கோட்டை முதல் மட்டக்களப்பு நோக்கி பயணிக்க இருந்த பாடுமீன் தொடரூந்தின் கழிப்பறையில் இருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் குறித்த சிசு நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த சிசு, சீமாட்டி ரிஜ்வே சிறார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த சிசுவை தொடரூந்தில் கைவிட்டுச் சென்றவரைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.