யாழில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது !

201908131130355721 Idol Wing arrests woman at airport over stolen statues SECVPF
201908131130355721 Idol Wing arrests woman at airport over stolen statues SECVPF

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் – பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டன என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளி 5 ஆம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த 32 வயது பெண்ணே கைது செய்யப்பட்டார்.

உயிர்க்கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக நீண்ட நாள்களாக தேடப்பட்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவற்துறையினர் கூறினர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்