யாழ். முன்னாள் மேயர் ஆர்னோல்ட் கைது!

யாழ். மாநகர சபை மேயராக இம்மானுவல் ஆர்னோல்ட் மீண்டும் பொறுப்பேற்பு
யாழ். மாநகர சபை மேயராக இம்மானுவல் ஆர்னோல்ட் மீண்டும் பொறுப்பேற்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்., மார்ட்டின் வீதி அலுவலகத்தில் வைத்து ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை வாக்குமூலம் பெற யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட ஆர்னோல்ட் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.