கிளிநொச்சியில் வெள்ளைவான் புரளியால் அடித்து நொறுக்கப்பட்டது வாகனம் – மூவர் காயம்..!!!

image 39a80dc5b9
image 39a80dc5b9

கிளிநொச்சியில், வெள்ளைவான் புரளியால்  வாகனம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.  

கிளிநொச்சி காவற்துறை பிரிவிற்கு உட்பட்ட பாரதிபுரம் வை எம் சி ஏ வீதியில் பொருட்கள் விற்பனை செய்வதற்காக சென்ற வாகனமே பொதுமக்களால் இவ்வாறு செவ்வாய்க்கிழமை (16) மாலை மடக்கி பிடிக்கப்பட்டது.

அந்த வாகனத்தில் பயணித்த மூவரையும் கிராம அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காவற்துறையினரிடம் ஒப்படைந்துள்ளனர்.   

அந்த மூவரும் தமிழ் மொழியில் பேசாமையால் பிரதேச மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து  கிராம அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை அழைத்து காவற்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

ஸ்தலத்துக்கு விரைந்தகாவற்துறையினர், அம்மூவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டபோது, வியாபாரம் செய்ய வந்திருந்த நிலையிலேயே பிரதேசவாசிகள் இவ்வாறு மடக்கிப்பிடித்து தடுத்துவைத்துள்ளனர் என காவற்துறையினரிடம் அம்மூவரும் தெரிவித்துள்ளனர்.