மன்னாரில் கோர விபத்து: முச்சக்கர வண்டி சாரதி மரணம்!

image 80826ae770
image 80826ae770

மன்னார் பிரதான பாலத்துக்கு அருகில்   செவ்வாய்க்கிழமை(23) காலை 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு,மேலும் சிறுவர்கள் உள்ளடங்களாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக பயணித்த மகேந்திரா ரக வாகனம் மற்றும் மதவாச்சி வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த  முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  கணவன் மனைவி உட்பட 9 வயது,6 வயது,4 வயதுடைய மூன்று பிள்ளைகள் உள்ளடங்களாக ஐவர்,  திருமண நிகழ்வு ஒன்றிற்காக முச்சக்கர வண்டியில் வருகை தந்த நிலையில்  விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வு நாளை (24) நடைபெறவுள்ளர்.

மன்னாரில் இருந்து தள்ளாடி நோக்கி பயணித்த மஹேந்திரா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியில் மோதிய நிலையில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதே நேரம் பலத்த காயங்களுடன் ஏனையோர் மன்னார் பொது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மன்னார் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்