தியாகதீபம் நினைவிட விவகாரம்; ஆர்னோல்ட்டுக்கு சி.வி.கே கடிதம்!

thileepan
thileepan

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தைப் பராமரித்து நிர்வகிக்கும் உரிமையும் பொறுப்பும் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கே உரியதாகும் என்பதால் அதனை வேறு எவருமோ அல்லது அரசியல் கட்சியோ உரிமை கோரமுடியாது. இவ்வாறு தெரிவித்து யாழ். மாநகர சபை முதல்வர் ஆர்னோல்ட்டுகுக்கடிதம் அனுப்பியுள்ளார் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம்.

இது குறித்து அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

எதிர்வரும் 26.09.2019 ஆம் திகதி தியாகி திலீபனின் நினைவு தினம் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

இதனையயாட்டி நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தைத்ச் துப்புரவு செய்து நினைவு தின அஞ்சலி நிகழ்வுக்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்துதவுமாறு வேண்டப்படுகிறது.

இந்த நினைவிடத் தூபி 1988 ஆம் ஆண்டில் நான் மாநகர ஆணையாளராக இருந்தபோது எமது செலவில் நிர்மாணிக்கப்பட்டது. அது அரச படைகளால் அழிக்கப்பட்டதனால் மீண்டும் 1998 இல் புனரமைக்கப்பட்டது.

அதுவும் அரச படைகளால் அழிக்கப்பட்டாலும் நினைவிடத் தளம் அப்படியே உள்ளது.

ஆகவே, இந்த நினைவிடத்தை பராமரித்து நிர்வகிக்கும் உரிமையும் பொறுப்பும் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கே உரியதாகும் என்பதால் அதனை வேறு எவருமோ அல்லது அரசியல் கட்சியோ உரிமை கோரமுடியாதுஎன்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்த விரும்புகிறேன் என்றுள்ளது.