இலங்கை வலைத்தள பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை!

media
media

இலங்கை வலைத்தள பாவனையாளர்களுக்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவினரால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சமகாலத்தில் பல்வேறு நபர்களின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமையினால் அவற்றினை பாதுகாத்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தங்களின் தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பதற்கு கடவுச்சீட்டு போன்ற பாதுகாப்பு முறை ஒன்றை குறைந்தபட்சம் பயன்படுத்துமாறு இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தங்களின் தனிப்பட்ட தரவுகளை சேமித்து வைக்கும் External Hard Disk, Pen Drive, Dvd Disc போன்றவற்றை தங்களிடமே வைத்துக் கொள்ளுமாறும், சமூக வலைத்தள கணக்குகளின் கடவுச்சொற்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும் இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு அறிவுறுத்தியுள்ளது.