புலம்பெயர் இலங்கை தமிழர்களை நாடு திரும்புமாறு வலியுறுத்து

cv1
cv1

இந்தியா உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் நாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம், நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் நாட்டில் வேலூரில் நேற்று (10) நடைபெற்ற திருவள்ளுவர் விழாவில் கலந்து கொண்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கையில்,

“இந்தியா உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் நாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும். அவ்வாறு இந்தியாவில் இருந்து இலங்கை திரும்புபவர்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பில் தன்னிறைவு அடையும் வரை இந்திய அரசு, இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்.

போர் சமயங்களில் இலங்கையில் இருந்து 10 இலட்சம் தமிழர்கள் வெளியேறி விட்டனர். அவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் தமிழர்களுக்கு உரிய வழமான வாழ்க்கைச் சூழ்நிலையை ஏற்படுத்திட பலமாக அமையும்.

அவ்வாறு இலங்கையில் இருந்து வெளியேறிய தமிழர்களின் 65 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாக உள்ளன.

அங்கு இன்னும் இராணுவ முகாம்கள் உள்ளமையின் காரணத்தினால் அவற்றை தமிழர்களிடம்
ஒப்படைக்க வேண்டும் என இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.

புதிய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மை தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதால் அவர் தனது அரசியல் வாழ்க்கையை பௌத்தர்களுக்கு ஆதரவானதாக மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் உள்ளது.