பொதுத் தேர்தலில் நிருவாகத் துறைக்கும் சட்டத்துறைக்கு முரண்பாடான அரசாங்கம் தோற்றம் பெற்றால் நாட்டுக்கு எந்தவிதப் பயனும் இல்லையெனவும், அது கடந்த நல்லாட்சி அரசாங்கம் போன்றே அமையும் என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இதனால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றி, பொதுத் தேர்தல் வெற்றியுடனே முழுமை பெறுகின்றது.
பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதே எமது பிரதான இலக்கு. இது நிறைவேறாது போனால் எமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற அமைத்த ஜனாதிபதியின் நடவடிக்கைகளை செயற்படுத்த முடியாமல் போகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.