தேள்களை கடத்த முயற்சித்த சீனப்பிரஜை கைது

china
china

200 தேள்களைக் கடத்த முயற்சித்த சீனப்பிரஜை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தமது பயணப் பொதியில் வைத்து தேள்களை உயிருடன் கொண்டுசெல்ல முயற்சித்துள்ளார். இதன்போது விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் குறித்த சீனப்பிரஜை கைது செய்யப்பட்டு சுங்கப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தேள்களை இலங்கையிலிருந்து வௌிநாடுகளுக்குக் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவு அறிவித்துள்ளது.