திருகோணமலையில் மேலதிக வகுப்புகளுக்குத் தடை!

Dengue01
Dengue01

டெங்கு நோய் தாக்கத்தின் அதிகரிப்பினால் பாடசாலையில் இடம்பெறும் மேலதிக வகுப்புக்களை மட்டுப்படுத்துமாறு திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில்,

உயிர்க்கொல்லி டெங்கு நோய் தாக்கம் தற்போது நகர எல்லையில் அதிகரித்துள்ளது. இதனடிப்படையில் மாணவர்கள், ஆசிரியர்கள் டெங்கு நோயினால் எளிதில் பாதிப்புக்கள்ளாகின்றனர்.

அவர்களை டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு திருகோணமலை நகரத்தில் நடாத்தப்படுகின்ற மேலதிக வகுப்புக்களை காலை 7.00 மணிக்கு முன்னதாகவும் மாலை 6.00 மணிக்கு பின்னரும் நடாத்துவதை தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெங்கு நோயில் இருந்து மக்களை பாதுகாக்கும் இச் செயற்திட்டத்தில் அனைவரும் ஒத்துழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.