சிறிசேனாவின் ஆதரவின் கீழ் நினைவுகூரப்பட்ட சர்வதேச ஓசோன் தினம்

oson
oson

ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் இன்று (16) இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஆதரவின் கீழ் நினைவுகூரப்பட்டது.

உலக ஓசோன் தினத்தையும், மொன்றியல் ஒப்பந்தத்தின் 32 வது ஆண்டுவிழாவையும் ஒட்டி மகாவலி வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

மொன்றியல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள அனைத்து நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 அன்று உலக ஓசோன் தினத்தை கொண்டாடுகின்றன.

மொன்றியல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட இலங்கை 30 ஆண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும் முதல் நாள் அட்டை வெளியிடப்பட்டது.

மொராட்டுவா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கே.கே.சி.கே.பெரேரா “மொன்றியல் ஒப்பந்தத்திற்கு கிகாலி திருத்தங்கள் மற்றும் காலநிலை மாற்றத்தில் அதன் தாக்கம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மொன்றியல் உடன்படிக்கையின் சமீபத்திய திருத்தமாக பார்க்கப்படுவது 2016ம் ஆண்டில் கொண்டுவரப்படட கிகாலி (Kigali) திருத்தமாகும்.

இந்த திருத்தத்தின் பிரகாரம் வளர்ந்து வரும் தேசமாக இலங்கை ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதில் ஹைட்கார்பன் (HFCs) பாவனையை 2020 க்குள் 35% ஆகவும், 2025 ஆம் ஆண்டில் 67.5% ஆகவும், 2030 ஆம் ஆண்டில் 100% ஆகவும் குறைக்கும் என்று உறுதியளித்துள்ளது. இன்றைய நிலையில், இலங்கையானது ஓசோன் படலத்தை பாதிக்கக்கூடிய எந்தவொரு இரசாயன வகைகளையம் இங்கே உற்பத்தியோ அல்லது ஏற்றுமதியோ செய்யாத போதிலும், அதனை நாட்டுக்குள் இறக்குமதி மட்டுமே செய்கிறது.