பெரும்பான்மையோர் தீர்மானமே முக்கியம்- ஹரீன்

hareen fernando
hareen fernando

கட்சியிலுள்ள பெரும்பான்மையினரின் தீர்மானத்தின் மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச கட்சியின் தலைவரும் பிரதமர் வேட்பாளரும் என்பது தெளிவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று (16) சிறிக்கொத்தவில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவரைத் தீர்மானிப்பதற்கு கருத்துக் கோரல் ஒன்றை நடாத்துமாறு கட்சித் தலைமையிடத்தில் கோரப்பட்டது.

எனினும் அதனை செவிமடுக்காது செயற்பட்டதனால் தாம் சஜித் பிரேமதாசவின் பெயரை பிரேரித்ததாக தெரிவித்தார்.

ரஞ்ஜித் மத்தும பண்டார சஜித் பிரேமதாசவின் பெயர் பிரேரிக்க, அதனை தான் வழிமொழிந்ததாக ஹரீன் பெர்னான்டோ தெரிவித்தார்.