மகிந்தானந்தவின் கருத்திற்கு சீ.வீ.கே எதிர்ப்பு

cvk 1
cvk 1

தமிழ் மக்களுக்கு சோறும் தண்ணீரும் தான் முக்கியமானவை என அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவின் கருத்து, முழு தமிழினத்தையும் கொச்சைப்படுத்துகின்றது என வட மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஜானம் விசனம் வெளியிட்டுள்ளார்.

இன்றைய தினம் (18) யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.

மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

“தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களாக சோற்றுக்கும், தண்ணீருக்கும் போராடவில்லை. அரசாங்கத்தின் பொருளாதார தடை இருந்த காலத்திலும் தமிழ் மக்கள் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள்.

இவ்வாறான கருத்தை கூறிய
மகிந்தானந்த அலுத்கமகே சந்தித்தவர்கள் சில வேளை பிச்சைக்காரர்களாக இருக்கலாம்.

ஒரு மானமுள்ள தமிழன் எந்த கட்சியில் இருந்தாலும் இதனை சொல்லியிருக்க மாட்டான்” என ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 14ம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.