தொலைபேசி உரையாடல் தொடர்பில் விசாரணை வேண்டும் !

6a 1qq
6a 1qq

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் 3 நீதிபதிகளுக்கிடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளில் வெளியான தகவல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டதரணிகள் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தராதரம் பாராது அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.