6,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்!

graduate appoinment
graduate appoinment

அரச சேவைகளின் பயிற்சிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட 6,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் தகுதிகளை பரீட்சிப்பதற்காக 10 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பட்டதாரிகள் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் பயிற்சிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

அரச நிறுவனங்களின் முகாமைத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.