கோட்டாபயவின் ஊதுகுழலே கிளிநொச்சி தமிழ் ஊடகம் – சிறீதரன் குற்றச்சாட்டு

shritharan
shritharan

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்காக கிளிநொச்சியில் உள்ள தமிழ்க்குரல் ஊடகம் ஊதுகுழலாக செயற்படுவதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் (17) கிளிநொச்சி கனகாம்பிகை குளம் ஆலய முன்றலில் இடம்பெற்ற இரணைமடு நீர்த்தேக்கத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயற்படுகிறார்.

தமிழர் பிரதேசங்களில் உள்ள குளங்களை அழித்தல், மாவட்ட மட்டத்தில் பிரதேச வாதத்தை தூண்டுதல், மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் கிளிநொச்சியை தளமாக கொண்டியங்கும் தமிழக்குரல் வானொலி ஊடகம், பிரதேச வாதத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

இது தொடர்பில் அண்மையில் ‘சாதி, பிரதேசவாத அரசியலை நிறுத்துங்கள்’ எனும் தலைப்பில் தான் பிரதேசவாதம் பேசுவதாக தமிழ்க்குரல் செய்தி வெளியிட்டிருந்ததாக சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறான செய்திகளின் மூலம் ஊடகங்கள் ஜனாதிபதியின் ஊதுகுழல்களாக செயற்படுவதாக சாடினார்.

தமிழ்க்குரல் செய்தி தளத்தினூடாக சிறீதரன் அவர்கள் வாக்குகளை குறிவைத்து சாதி மற்றும் பிரதேசவாத கருத்துக்களை விதைப்பதாக தெரிவித்தமையை சகித்துக்கொள்ள முயடியாத நிலையில் இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.