சிவாஜிலிங்கம், ஶ்ரீகாந்தாவின் வெளியேற்றம் ரெலோவிற்கு பின்னடைவு – குகதாஸ் தெரிவிப்பு

vlcsnap 2020 01 19 11h17m44s376
vlcsnap 2020 01 19 11h17m44s376

சிவாஜிலிங்கம், ஶ்ரீகாந்தா இருவரினதும் வெளியேற்றம் தமிழீழ விடுதலைக் கழகத்திற்கு பின்னடைவாக அமையும் என்பதனை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார்.

தமிழ்க்குரலிற்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் சிவாஜிலிங்கம், ஶ்ரீகாந்தா ஆகிய இருவரும் தமிழீழ விடுதலைக் கழகத்தை அடையாளப்படுத்துகின்றவர்களாக மக்கள் நன்கறிந்தவர்களாக இருந்தனர்.

அவர்கள் இருவரினதும் வெளியேற்றம் யாழ் மாவட்டத்தை பொறுத்த மட்டில் தமிழீழ விடுதலைக் கழகத்திற்கு ஒரு பின்னடைவை தோற்றுவிக்கும். ஆயினும் ஒட்டுமொத்த தமிழீழ விடுதலைக் கழகத்திற்கும் அது பாதிப்பாக அமையாது. அதேவேளை அவர்கள் இருவரினதும் வெளியேற்றம் ஏனைய மாவட்டங்களில் பின்னடைவை தோற்றுவிக்காது.

அத்துடன் சிவாஜிலிங்கம், ஶ்ரீகாந்தா ஆகிய இருவருடன் தானும் கட்சியை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்ற செய்திகளில் உண்மை இல்லை எனவும் தெரிவித்தார்.