100 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

accident
accident

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கரோலினா பகுதியில் நேற்று (21) இரவு முச்சக்கரவண்டியொன்று சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் பயணித்த நால்வரில், மூவர் படுகாயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலபிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இயந்திர கோளாறு காரணமாக முச்சக்கரவண்டி பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு பள்ளத்தில் உருண்டுள்ளது. இதனால் முச்சக்கரவண்டியில் இருந்தவர்கள் வெளியில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகினர்.

விபத்து குறித்து வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.