பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிப்பு

pillayan0
pillayan0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று (22) மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி எம்.என்.அப்துல்லா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது பெப்ரவரி 25ம் திகதி வரை வழக்கினை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிவநேசதுரை சந்திகாந்தன் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.