பால்மா மற்றும் சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம்!

gas
gas

இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளின் விலை அதிகரிப்புக்கு அமைச்சரவையின் வாழ்க்கைச் செலவு குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனைடிப்படையில் 400 கிராம் பால்மா பக்கற்றின் விலை 20 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை உப குழுவால் முன்வைப்பட்டு அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்ட இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளுக்கான விலைச் சூத்திரத்தின் அடிப்படையிலேயே இந்த விலை அதிகரிப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரம் 12.5 கிலோகிராம் நிறையுடைய சமயல் எரிவாயுவின் விலையை 250 ரூபாவால் குறைக்கவும் அமைச்சரவையின் வாழ்க்கை செலவு குழு அனுமதி வழங்கியுள்ளது.