வடக்கின் உற்பத்தியாளர்கள் இல்லாத வர்த்தக கண்காட்சி !

90
90

யாழில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி இம்முறை மக்களின் எதிர்பார்ப்பை முழுமைப்படுத்தவில்லை என மக்கள் குறிப்பிட்டுள்ளனர் .

வடக்கின் பெரும் ,சிறு உற்பத்தியாளர்களின் சந்தைப்படுத்தல் காட்சிப்படுத்தல் என்பன இடம்பெறாமை பெரும் குறைபாடாகவே இருந்தது .

வடக்கின் முக்கிய உற்பத்தியாளர்கள் இல்லாது தெற்கு இலத்திரனியல் உற்பத்திகளும் ,விற்பனையில் விளம்பரம் தேவை என நினைத்த கம்பெனிகளும் கண்காட்சியில் பங்குபற்றியுள்ளன .

உள்ளூர் சிறுகைத்தொழில் உற்பத்தியாளர்களின் பொருட்களை சந்தைப்படுத்தவும், அவற்றுக்கான விளம்பர முயற்சியை மேற்கொள்ளும் இடமாகவும் கண்காட்சியில் முக்கிய பங்கு கொடுத்து ஏனைய பகுதியினருக்கு இடம் வழங்கியிருக்கலாம் என ஆதங்கம் வெளியிடப்பட்டுள்ளது .

வடக்கின் 5 மாவட்டங்களிலும் உள்ள உள்ளூர் பெரும், சிறு உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தும் முகமாக இந்த கண்காட்ச்சி அமையவில்லை என்பது கண்காட்சியின் முதன்மைத்தன்மையை குறைத்துள்ளது .