சீனர்களை களவாக கரவாக சந்தித்த ‘சில’ கட்சிகள் – போட்டுடைத்த விக்கி!

Eluha Tamil விக்கி
Eluha Tamil விக்கி

இந்திய எதிர்ப்பாளராகக் காட்டும் சில கட்சிகள் இரவில் சீனர்களைக் களவாக, கரவாகக் கண்டதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நலன்சார்பானவர் என உங்களை பிம்பப்படுத்துகிறார்களே எனத் தமிழ்க் குரல் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விக்னேஸ்வரன்,
“ஏதோ தாங்கள் புலிகளின் வாரிசுகள் என்றும் இந்தியா புலிகளுக்கு ஆதரவு வழங்காதபடியால் தாமும் வழங்காவிட்டால் மற்றவர்கள் தங்களைப் புலிகளாக நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் இந்தியாவிற்கெதிரான கருத்துக்களைப் பரப்பி வருகின்றார்கள். அவர்கள் சீனாவுடனோ வேறு எந்த நாட்டுடனோ சாராது இருந்தால்
மிகவும் நல்லது. ஆனால் சில கட்சிகள் இரவில் சீனர்களைக் களவாக, கரவாகக் கண்டதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு CCTV ஆதாரங்கள் இருப்பதாகக் கூடச் சொல்லப்பட்டது. எமது இந்திய சார்பு நேரடியானது. நேசத்தின் பாலானது. பாரத அரசாங்கத்துக்குப் பயந்து நாம் கொண்டிருக்கும் சார்பு நடவடிக்கை அல்ல.” என்றார்

தமிழ்க் குரலுக்கு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வழங்கிய முழுமையான நேர்காணல்: