முறையான பாதுகாப்பு இல்லை கொரோனா வைத்தியர்களை தாக்கும்!

93
93

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளை அடையாளம் காணுதல் மற்றும் சோதனை நடவடிக்கையின் போது சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் ஏற்படும் என சுகாதார நிபுணர் குழுவின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இவ்வாறான சோதனையின் போது உயர் தரத்திலான ஆய்வகம் அவசியம் எனவும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இரத்த பரிசோதனை செய்தால், பாதுகாப்பான நிலைமையின் கீழேயே காற்றை வளிமண்டலத்தில் வெளியேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸை கண்டறிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தேவையான தொழில்நுட்பம் இருந்தாலும், தற்போதுள்ள பாதுகாப்பு சாதனங்களில் குறைபாடுகள் உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முறையான பாதுகாப்புகளை இல்லாமையினால் மருத்துவ ஆய்வக ஆய்வாளர்கள், பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் தாதிகளுக்கு ஆபத்து ஏற்பட கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.