‘பசுமையான தாயகம் உருவாக்க மரம் நடுகை விழா ஏற்பாடு!

20190919 194356
20190919 194356

‘பசுமையான தாயகம் உருவாக்க நம்மால் முடியும்’ எனும் தொனிப்பொருளில் வவுனியா தரணிக்குளத்தில் மாபெரும் 600 மரம் நடுகை விழா.

‘பசுமையான தாயகம் உருவாக்க நம்மால் முடியும்’ எனும் தொனிப்பொருளில் வவுனியா தரணிக்குளத்தில் மாபெரும் மரம் நடுகை விழா எதிர்வரும் (21.09.2019) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

தரணிக்குளம் அரசி இயற்கை தாவர முன்பள்ளியின் ஏற்பாட்டில் 18 மாதங்கள் பராமரிப்பு மற்றும் இயற்கை உரத்துடன் கூடிய மருதை, இலுப்பை , நாவல் ,புங்கை மரம் , வேப்பமரம் போன்ற 600க்கு மேற்பட்ட மரங்களே நாட்டப்படவுள்ளன.
இவ் மரங்கள் தரணிக்குளம் பகுதியிலிருந்து தாண்டிக்குளம் வரையிலான வீதியோரத்தில் சுமார் 10கிலோ மீற்றர் தூரத்திற்கு நாட்டப்படவுள்ளன.

மரம் நடுகை விழாவிற்கு தயாராகவுள்ள மரக்கன்றுகளை நேற்றைய தினம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளர் குலசிங்கம் திலீபன் மற்றும் நகரசபை உறுப்பினர் பாலசிங்கம் பிரசன்னா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்..