கிளிநொச்சி பண்பாட்டு பெருவிழாவிற்கு அழைப்பு!

News 2
News 2

இளைய சமுதாயம் தன்னுடைய நடைமுறை வாழ்க்கை, பண்பாட்டு விளுமியத்திலிருந்து விலகிப் போகாத தமிழ் மக்களை உள்ளடக்கிய அர்த்தமுள்ள பண்பாட்டு ஊர்வலம் ஒன்றை கரைச்சி பிரதேச சபையினால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அனைவரும் கலந்து கொள்ளுங்கள் என கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

நேற்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

கிளிநொச்சி மாவட்டம் உள்ளிட்ட தமிழர் தாயகமெங்கும் அண்மைக்காலமாக நலிவடைந்து வருகின்ற தமிழ் மக்களுடைய பண்பாடு, விழுமியம், நடத்தைகள் தொடர்பில் பல் வேறுபட்ட அபிப்பிராயங்கள் தலைதூக்கி இருக்கிறது.

போர் நடைபெறும் வரையில் கட்டிக் காக்கப்பட்ட தமிழர்களுடைய வாழ்வியல் நடத்தைக்கோலங்கள், பண்பாட்டுத் தளங்களில் பல்வேறு வகையான மாற்றங்கள் இடம்பெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள், மற்றும் புத்தி ஜீவிகளும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தக் கருத்துக்களின் அடிப்படையில், பண்பாட்டுப் பெருவிழா ஒன்றை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட, வெளியே உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதனூடாக ஒரு பண்பாட்டுத் தளத்தில் ஒரு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் எதிர்காலம் பற்றிய பண்பாடு விடயங்கள் குறித்த ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையிலும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மற்றவர்களை உள்ளீர்க்கும் வகையிலும் இந்த விழாவை நடத்துவது என கரைச்சிப் பிரதேச சபையினால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

அந்தவகையில் எதிர்வரும் 28. 09 .2019 (சனிக்கிழமை) பிரதானமாக நான்கு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் பண்பாட்டு திருவிழா ஒரு பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு பிரதேச முடிவு செய்திருக்கிறது.

அந்த வகையில் பிரதேச சபை முன்றலில் 1.30 மணிக்கு ஆரம்பமாகி ‘பண்பாட்டு பவனி’ கிளிநொச்சி பசுமைப் பூங்காவை சென்றடைந்து, ‘மருதங் கிளி’ எனும் ஆவண நூல் வெளியீடு செய்யப்படும். தொடர்ந்து 15 துறை சார்ந்து பணியாற்றிய, தொண்டாற்றிய துறைசார் விருதுகள் பிரதேச சபையினால் வழங்கப்பட இருக்கின்றது.

அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் 2009 க்கு முன்பு தமிழ்தேசிய கலைஞர்களாகவும் இசையமைப்பாளர்களாகவும் பாடகராகவும் இருந்த அனைவரையும் ஒன்றிணைத்து இசையமைப்பாளர் செயல்வீரன் அவர்களுடைய நெறியாள்கையில் ஒரு நிகழ்வும் இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

இளைய சமுதாயம் தன்னுடைய நடைமுறை வாழ்க்கை, பண்பாட்டு விளுமியத்திலிருந்து விலகிப் போகாத தமிழ் மக்களை உள்ளடக்கிய அர்த்தமுள்ள பண்பாட்டு ஊர்வலம் ஒன்றை கரைச்சி பிரதேச சபையினால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அனைவரும் கலந்து கொள்ளுங்கள் என தெரிவித்தார்.