கேப்பாபிலவு,துணுக்காய் மக்களின் காணி தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Keppapilavu Land News 14
Keppapilavu Land News 14

கேப்பாபிலவு பகுதி மக்களின் 59.5 ஏக்கர் காணி விடுவிப்பு விடயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

முல்லைத்தீவு கேப்பாபிளவு மக்கள் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை இன்று வட மாகாண ஆளநர் சுரேன் ராகவன் முன்னெடுத்து வந்துள்ளர் .

அது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் தலைமையில் 11.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறு்பபினர் சாந்தி சிறிஸ்காந்தராசா, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், இராணுவ உயர் அதிகாரிகள், மாகாண காணி ஆணையாளர், உதவி பிரதேச செயலாளர், கேப்பாபிளவு மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

அதன்போது காணி விடுவிப்பு தொடர்பில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

மேலும், முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஆலங்குளம் பகுதியில் படையினர் வசமுள்ள மக்களின் காணி விடயம் தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசா, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், படை அதிகாரிகள், மாகாண காணி ஆணையாளர், ஆலங்குளம் பகுதியில் காணி உரிமம் கோரும் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனினால் பல்வேறு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது.