கோத்தாவுக்கே ஆதரவு – மைத்திரி தீர்மானம்?

Chandra Rajapaksa UTV 2
Chandra Rajapaksa UTV 2

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால தீர்மானித்துள்ளார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது.

இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவுடன் புதிய கூட்டணி குறித்து புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றைச் செய்துகொள்ளும் எனக் கூறப்படுகின்றது. முன்னதாக ஜனாதிபதித்தேர்தலில் இந்தப் புதிய கூட்டணி எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்ற சர்ச்சை நிலவியது.

ஆயினும் அது இறுதிப்படுத்தப் பட்டு இப்போது சமரசம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.

புதிய கூட்டணியின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளில் செய்யப்படும் நியமனங்கள் குறித்து முன்னர் உடன்பாடு எட்டப்படவில்லை. இப்போது அதிலும் இணக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்படி அந்த இரண்டு பதவிகளையும் பொதுஜன பெரமுனவே வகிக்கலாம். ஆனால் செயலாளர் நியமனம் செய்யப்படும்போது சுதந்திரக் கட்சியின் கரிசனை கவனத்தில் கொள்ளப்படும் என்ற இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளுடனும் இணங்கிச் செயற்படக்கூடிய ஒருவர் கூட்டணியின் செயலாளராக நியமிக்கப்படவேண்டும் என்பதால் அவ்வாறான யோசனை ஒன்றைச் சுதந்திரக் கட்சி முன்வைத்தது எனக் கூறப்படுகின்றது.

பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த மாதம் இரண்டாம் வாரம் விஞ்ஞாபனம் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.