வீட்டுத்திட்டங்கள் மூலம் வீட்டுப் பிரச்சினைகள் தீர்க்கப்படும்!

1 maki 1
1 maki 1

கொழும்பு மாவட்டத்தில் இருக்கும் குடிசை குடியிருப்பாளர்களுக்கான வீட்டுத் திட்டங்களை விரைவாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

நகர அபிவிருத்தி,நீர்ப்பாசன மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சின் மீளாய்வுக் கூட்டம் நேற்று பத்தரமுல்லையில் நடைபெற்றது.

இதன்போது கொழும்பு துறைமுக நகரம் மற்றும் கொழும்பை கேந்திரமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் கட்டட நிர்மாணங்கள்,வீதி அபிவிருத்தி, ரயில் பாதை, பூங்கா உருவாக்குதல் மற்றும் கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரம் அடங்கலான நகர அபிவிருத்தி குறித்து இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது. இதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்

இந்த திட்டத்தின் ஒரு பகுதி கொலன்னாவ பகுதியில் அமைந்துள்ள 240 சன்ஹித செவன வீட்டுத்திட்டமாகும், இந்த திட்டங்கள் மார்ச் மாதத்திற்கு முன்னர் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படும் என வீடமைப்பு வசதிகள் அமைச்சு கூறியுள்ளது.

மேலும் இதுபோன்ற பகுதிகளில் வசிப்பவர்கள் அடிப்படை உள்கட்டமைப்பு இல்லாமல் வறுமையில் வெல்பவர்கள் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு அவர்களுக்கு நிலத்திற்கான உரிமை பாத்திரங்கள் இல்லாதமையினால் நிபாடசாலை அனுமதியை பெற முடியவில்லை என்றும் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்ள தடை காணப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனவே இந்த வீட்டுத்திட்டங்கள் மூலம் வீட்டுப் பிரச்சினைகள் அம் மக்களுக்கு தீர்க்கப்படும் என்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.