ஹம்பாந்தோட்டை, மத்தளை – கொழும்புடன் இணைக்கும் அதிவேகப் பாதை

28 o 1
28 o 1

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தளை சர்வதேச விமான நிலையம் வர்த்தக நகரான கொழும்புடன் இணையும் தெற்கு அதிவேகப் பாதையின் இறுதிக் கட்டமான பாலட்டுவ தொடக்கம் பரவகும்புக்க வரையான பகுதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

கொடகம, பாலட்டுவ வெளியேறும் வாயிலுக்கு அருகில் பாதையை திறந்து வைத்ததன் பின்னர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழுவினர் பாலட்டுவ தொடக்கம் தெற்கு அதிவேகப் பாதையினூடாக பரவகும்புக்க வரை பயணித்தனர்.

அங்கு கடந்து வந்த அனைத்து நுழைவாயில்களுக்கு அருகிலும் கூடியிருந்த மக்கள் பாரிய வரவேற்பளித்தனர்.

திறந்து வைக்கப்பட்ட பாலட்டுவ தொடக்கம் பரவகும்புக்க வரையான பகுதியின் நீளம் 58 கிலோமீற்றர்களாகும். இதற்காக 169 பில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது.

பாலட்டுவ தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி 96 கிலோமீற்றர்களாகும். நான்கு கட்டங்களின் கீழ் மாத்தறை – பெலியத்த, பெலியத்த – பரவகும்புக்க, பரவகும்புக்க – அந்தரவெவ மற்றும் அந்தரவெவ – மத்தளை வரையான பகுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதற்காக 225 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.