“திலீபன் வழியில் வருகிறோம்” என்ற தொனிப்பொருளில், பேரணி யாழை சென்றடைகின்றது!

IMG 3230
IMG 3230

“திலீபன் வழியில் வருகிறோம்” என்ற தொனிப்பொருளில்,
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இன அழிப்பு மற்றும் காணாமல் ஆக்கபட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியின் ஏற்பாட்டில் குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தியாகி திலீபனின் 32 வது நினைவு நாளை முன்னிட்டு கடந்த 21 ஆம் திகதி வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நடைபயணமொன்று ஆரம்பமானது.

வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபியிலிருந்து தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் ஆரம்பமாகிய நடைபயணம், 6ஆம் நாளான இன்றைய தினம், காலை 8 மணியளவில் நாவற்க்குழி சந்தியில் இருந்து ஆரம்பமாகி யாழ்பாணத்தில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபியை சென்றடையவுள்ளது.

குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர்கள், காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து‌ கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.