வவுனியா நகரசபையினர் அதிரடி நடவடிக்கை

uc news 1
uc news 1

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை காப்பாற்ற வவுனியா நகரசபையினர் அதிரடி நடவடிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைைை 102 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு வவுனியா நகரசபையினரினால் நேற்று மதியம் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எட்டுக்கும் மேற்பட்ட நகரசபை சுகாதார ஊழியர்கள் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் , தரைகள் , பயணிகள் நிற்கும் இடங்கள் போன்றவற்றை கிருமிநீக்கி மூலம் சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இச் செயற்றிட்டத்தில் நகரசபை செயலாளர் ஆர். தயாபரன் , நகரசபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம் , ரி.கே.இராஜலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மேற்பார்வை செய்தனர்.